ருமேனியா நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு நபரிடம் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளது. எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ள விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நபரிடமிருந்து ருமேனியாவிற்கு அனுப்பவதாகக் கூறி சுமார் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளார்கள்
இது தொடர்பாக முன்வைப்பதற்காக பல தடவைகள் பாதிப்புள்ளான தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
எனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் சட்ட அலுவலர்கள் நீதிமன்றிற்கு செல்லவில்லை. பாதிப்புக்குள்ளான தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நீதிமன்றிற்கு அவர்கள் செல்லவில்லை.
இன்று நாங்கள் இலவசமாக சட்ட உதவி வழங்கியிருக்கிறோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்ல. இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் பாதிப்புக்குள்ளான அந்த 500 பேரினதும் பாதிப்புக்குட்பட்ட தரப்பினர் சார்பாக சுமார் 74 கோடி ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு உள்ளது.
முழுமையாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நான் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். இது தொடர்பாக இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் சட்டப்பிரிவு இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது தவறானது.
ஆகவே குறித்த பாதிப்புக்குள்ளான தரப்பினர் சார்பாக இவர்கள் முன்னிலையாக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
ருமேனியாவிற்கு அனுப்புவதாகக்கூறி ஒருவரிடம் ரூ.18 இலட்சம் -அபகரிப்பு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித் ருமேனியா நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு நபரிடம் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளது. எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ள விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு நபரிடமிருந்து ருமேனியாவிற்கு அனுப்பவதாகக் கூறி சுமார் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளார்கள்இது தொடர்பாக முன்வைப்பதற்காக பல தடவைகள் பாதிப்புள்ளான தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். எனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் சட்ட அலுவலர்கள் நீதிமன்றிற்கு செல்லவில்லை. பாதிப்புக்குள்ளான தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நீதிமன்றிற்கு அவர்கள் செல்லவில்லை. இன்று நாங்கள் இலவசமாக சட்ட உதவி வழங்கியிருக்கிறோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்ல. இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் பாதிப்புக்குள்ளான அந்த 500 பேரினதும் பாதிப்புக்குட்பட்ட தரப்பினர் சார்பாக சுமார் 74 கோடி ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு உள்ளது. முழுமையாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நான் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். இது தொடர்பாக இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் சட்டப்பிரிவு இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது தவறானது. ஆகவே குறித்த பாதிப்புக்குள்ளான தரப்பினர் சார்பாக இவர்கள் முன்னிலையாக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.