• Apr 16 2026

ரைஸ், கொத்து விலை நள்ளிரவுடன் அதிகரிப்பு-மின்சாரக் கட்டண அதிகரிப்பின் எதிரொலி !

Ziya / Mar 31st 2026, 11:45 am
image

நாட்டில் இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவுகளின்  விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது 

அந்தவகையில் அனைத்து உணவகங்களிலும்   மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டும் எனவும், அத்தகைய சூழ்நிலையில் பாரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதனால், இத்தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

ரைஸ், கொத்து விலை நள்ளிரவுடன் அதிகரிப்பு-மின்சாரக் கட்டண அதிகரிப்பின் எதிரொலி நாட்டில் இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவுகளின்  விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது அந்தவகையில் அனைத்து உணவகங்களிலும்   மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டும் எனவும், அத்தகைய சூழ்நிலையில் பாரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதனால், இத்தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement