வடமாகாணத்தில் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு 198 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபையின் அலுவலகப் பணிப்பாளர் P. துவாரகன், இன்று (20) தற்போதைய வளிமண்டல மாசு நிலை தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வளி மாசடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வளி மாசுபாட்டின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் போக்குவரத்து பயணங்களை மேற்கொள்ளுமாறும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்னீர் மீனவர்கள் இந்த வளி மாசுபாட்டின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வடக்கு கிழக்கை சூழ்ந்த காற்று மாசு; வெளியே செல்ல வேண்டாம் - அவசர எச்சரிக்கை வடமாகாணத்தில் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு 198 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபையின் அலுவலகப் பணிப்பாளர் P. துவாரகன், இன்று (20) தற்போதைய வளிமண்டல மாசு நிலை தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வளி மாசடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வளி மாசுபாட்டின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் போக்குவரத்து பயணங்களை மேற்கொள்ளுமாறும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்னீர் மீனவர்கள் இந்த வளி மாசுபாட்டின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.