• Nov 27 2026

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

Ziya / Nov 26th 2026, 5:11 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று (26.11.2026) நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விசேட கூட்டத்தில், சபையின் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நான்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, 18 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


பாதீடு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன்,


2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரிப்பதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 12 வட்டாரங்களிலும் மக்களுடனும், சபை உறுப்பினர்களுடனும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதன்

அதனடிப்படையில், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கருத்திற்கொண்டு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்குப் பொருத்தமான வகையில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், சிறுவர்கள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கான நலத்திட்டங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பாதீட்டில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன், 12 வட்டாரங்களிலும் மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவளித்த சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சார்பில் தனது நன்றிகளையும் தவிசாளர் கரிகாலன் இதன்போது தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று (26.11.2026) நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விசேட கூட்டத்தில், சபையின் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நான்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, 18 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.பாதீடு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன்,2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரிப்பதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 12 வட்டாரங்களிலும் மக்களுடனும், சபை உறுப்பினர்களுடனும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதன்அதனடிப்படையில், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கருத்திற்கொண்டு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்குப் பொருத்தமான வகையில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், சிறுவர்கள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கான நலத்திட்டங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பாதீட்டில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், 12 வட்டாரங்களிலும் மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவளித்த சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சார்பில் தனது நன்றிகளையும் தவிசாளர் கரிகாலன் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement