• Nov 27 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் - புதுக்குடியிருப்பில் கதவடைப்பு!

Chithra / Nov 27th 2026, 11:07 am
image


தமிழ் மக்களின் உரிமை மற்றும் சுபீட்சமான வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (27) தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.


2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இம்முறையும் சில கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், மாவீரர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் நினைவேந்தல் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.


முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், வன்னிவிளாங்குளம், ஆலங்குளம், முள்ளியவளை, அளம்பில், கோடாலிக்கல்லு களிக்காடு மற்றும் மணலாறு ஜீவன் முகாம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அத்துடன், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம், இரணைப்பாலை, பச்சைப்புல்மோட்டை, இரட்டைவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


மேலும், அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப வளாகம், முல்லைத்தீவு கடற்கரை, ஆனந்தபுரம், கற்சிலைமடு மற்றும் புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் உள்ளிட்ட பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு நினைவேந்தல் தளங்களிலும் ஏற்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

 

இதேவேளை மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம் (27.11.2026) மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.


இதனால் புதுக்குடியிருப்பு நகரப் பகுதி வர்த்தக நடவடிக்கைகளின்றி அமைதியான சூழலில் காணப்பட்டதுடன், மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் - புதுக்குடியிருப்பில் கதவடைப்பு தமிழ் மக்களின் உரிமை மற்றும் சுபீட்சமான வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (27) தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இம்முறையும் சில கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், மாவீரர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் நினைவேந்தல் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், வன்னிவிளாங்குளம், ஆலங்குளம், முள்ளியவளை, அளம்பில், கோடாலிக்கல்லு களிக்காடு மற்றும் மணலாறு ஜீவன் முகாம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம், இரணைப்பாலை, பச்சைப்புல்மோட்டை, இரட்டைவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.மேலும், அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப வளாகம், முல்லைத்தீவு கடற்கரை, ஆனந்தபுரம், கற்சிலைமடு மற்றும் புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் உள்ளிட்ட பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு நினைவேந்தல் தளங்களிலும் ஏற்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதேவேளை மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம் (27.11.2026) மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.இதனால் புதுக்குடியிருப்பு நகரப் பகுதி வர்த்தக நடவடிக்கைகளின்றி அமைதியான சூழலில் காணப்பட்டதுடன், மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement