மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வேலைக்காக பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நீண்டகாலமாக அந்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டது. இந்நிலையில் மானிப்பாய் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சிறுமியிடம் தவறான நடத்தையில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் வேலைக்காக பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நீண்டகாலமாக அந்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டது. இந்நிலையில் மானிப்பாய் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.