எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பூரணை தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தானசாலைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தானசாலைகளை ஏற்பாடு செய்யும் குழுவினர் அல்லது தனிநபர்கள், தாங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரை நேரில் சந்தித்து தமது தானசாலைகளைப் பதிவு செய்துகொள்வது அவசியமாகும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுட தெரிவித்தார்.
தானசாலைகள் முறையாக நடைபெறுவதையும், சுகாதார விதிகள் பேணப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாட்டாளர்கள் தானசாலை நடத்தப்படவுள்ள துல்லியமான இடம், வழங்கப்படவுள்ள உணவு வகை அல்லது சேவையின் விபரங்களை வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கை - சுகாதாரப் பரிசோதகர்களின் விசேட அறிவிப்பு எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பூரணை தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தானசாலைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தானசாலைகளை ஏற்பாடு செய்யும் குழுவினர் அல்லது தனிநபர்கள், தாங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரை நேரில் சந்தித்து தமது தானசாலைகளைப் பதிவு செய்துகொள்வது அவசியமாகும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுட தெரிவித்தார். தானசாலைகள் முறையாக நடைபெறுவதையும், சுகாதார விதிகள் பேணப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாட்டாளர்கள் தானசாலை நடத்தப்படவுள்ள துல்லியமான இடம், வழங்கப்படவுள்ள உணவு வகை அல்லது சேவையின் விபரங்களை வழங்க வேண்டும்.பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.