அர்ஜென்டினாவின் தெற்கு அட்லாண்டிக் கடற்கரைக்கு அருகே கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மீட்டர் ஆழத்தில், பேருந்தின் அளவிற்கு சமமான ஒரு அரிய பாண்டம் ஜெல்லிமீன் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக ஸ்டைகியோமெடுசா ஜிகாண்டியா என அழைக்கப்படும் இந்த அபூர்வ ஜெல்லிமீன், ஷ்மிட் பெருங்கடல் நிறுவனத்தின் ஆய்வுப் பயணத்தின் போது வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது.
டியெரா டெல் ஃபியூகோ அருகிலுள்ள கடற்பகுதியில், ROV “சுபாஸ்டியன்” எனப்படும் தன்னாட்சி நீர்மூழ்கிக் கருவி மூலம் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது.
இந்த ஜெல்லிமீனின் மணிக்கு சுமார் ஒரு மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியது, மேலும் இதன் நான்கு நீளமான கைகள் தலா 10 மீட்டர் வரை நீளமடையும் திறன் கொண்டவை.
சாதாரண ஜெல்லிமீன்களைப் போல கொட்டும் விழுதுகள் இல்லாத இந்த இனம், பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்களை தனது நீண்ட கைகளின் மூலம் பிடித்து உணவாகக் கொள்கிறது என விஞ்ஞானிகளின் கூறுகின்றனர்.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஜெல்லிமீன் தனது ரிப்பன் போன்ற கைகளை மெதுவாக சுருட்டியும் நீட்டியும் ஆழ்கடலில் மிதந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இந்த அரிய பாண்டம் ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு, மனிதர்களால் இன்னும் முழுமையாக அறியப்படாத பெருங்கடலின் ஆழங்களில் மறைந்திருக்கும் எண்ணற்ற ரகசியங்களை மீண்டும் உலகிற்கு நினைவூட்டுகின்றது.
அர்ஜென்டினா கடற்கரையில் அரிய ஜெல்லி மீன் கண்டுபிடிப்பு அர்ஜென்டினாவின் தெற்கு அட்லாண்டிக் கடற்கரைக்கு அருகே கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மீட்டர் ஆழத்தில், பேருந்தின் அளவிற்கு சமமான ஒரு அரிய பாண்டம் ஜெல்லிமீன் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக ஸ்டைகியோமெடுசா ஜிகாண்டியா என அழைக்கப்படும் இந்த அபூர்வ ஜெல்லிமீன், ஷ்மிட் பெருங்கடல் நிறுவனத்தின் ஆய்வுப் பயணத்தின் போது வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. டியெரா டெல் ஃபியூகோ அருகிலுள்ள கடற்பகுதியில், ROV “சுபாஸ்டியன்” எனப்படும் தன்னாட்சி நீர்மூழ்கிக் கருவி மூலம் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது.இந்த ஜெல்லிமீனின் மணிக்கு சுமார் ஒரு மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியது, மேலும் இதன் நான்கு நீளமான கைகள் தலா 10 மீட்டர் வரை நீளமடையும் திறன் கொண்டவை. சாதாரண ஜெல்லிமீன்களைப் போல கொட்டும் விழுதுகள் இல்லாத இந்த இனம், பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்களை தனது நீண்ட கைகளின் மூலம் பிடித்து உணவாகக் கொள்கிறது என விஞ்ஞானிகளின் கூறுகின்றனர்.தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஜெல்லிமீன் தனது ரிப்பன் போன்ற கைகளை மெதுவாக சுருட்டியும் நீட்டியும் ஆழ்கடலில் மிதந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.இந்த அரிய பாண்டம் ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு, மனிதர்களால் இன்னும் முழுமையாக அறியப்படாத பெருங்கடலின் ஆழங்களில் மறைந்திருக்கும் எண்ணற்ற ரகசியங்களை மீண்டும் உலகிற்கு நினைவூட்டுகின்றது.