கடந்த ஒரு மாத காலமாக சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ள கவிஞர் தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் போராங்கள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் கவிஞர் தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இலக்கிய படைப்பாளிகள், பொது அமைப்பு சார்ந்தோர், அரசியல் கட்சி சார்ந்தோர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன் கடந்த சில வருடங்களாக சுங்கத்திணைக்களம் தடுத்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.
தீபச்செல்வன் உள்ளிட்டோரின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி வடக்கில் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ள கவிஞர் தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் போராங்கள் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் கவிஞர் தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இலக்கிய படைப்பாளிகள், பொது அமைப்பு சார்ந்தோர், அரசியல் கட்சி சார்ந்தோர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன் கடந்த சில வருடங்களாக சுங்கத்திணைக்களம் தடுத்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.