மன்னார் நகர் பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் போது, குறித்த உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவுகள் தயாரிக்கப்படும் இடங்கள் மிகுந்த அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும், உணவகம் முழுவதும் ஈக்கள் அதிகளவில் மொய்த்துக் கொண்டிருந்ததுடன், கழிவுநீர் வெளியேற முறையான வசதிகள் இன்றி காணப்பட்டுள்ளது.
மேலும் சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமை உட்பட குறித்த உணவகங்களுக்கு உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் பெறப்படவில்லை
அதே நேரம் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் எவ்வித மருத்துவச் சான்றிதழும் இன்றி பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தக் கடுமையான சுகாதார மீறல்கள் காரணமாக, குறித்த மூன்று உணவகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மன்னார் நகர் பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த ஆய்வின் போது, குறித்த உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுகள் தயாரிக்கப்படும் இடங்கள் மிகுந்த அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும், உணவகம் முழுவதும் ஈக்கள் அதிகளவில் மொய்த்துக் கொண்டிருந்ததுடன், கழிவுநீர் வெளியேற முறையான வசதிகள் இன்றி காணப்பட்டுள்ளது.மேலும் சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமை உட்பட குறித்த உணவகங்களுக்கு உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் பெறப்படவில்லை அதே நேரம் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் எவ்வித மருத்துவச் சான்றிதழும் இன்றி பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.இந்தக் கடுமையான சுகாதார மீறல்கள் காரணமாக, குறித்த மூன்று உணவகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.