இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் முரசுமோட்டை பொதுச்சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை" நோக்கமாகக் கொண்டு மக்கள் அணியின் திரள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு நாள் செயல்திட்டத்தின் 17ம் நாளான இன்று கிளிநொச்சி முரசுமோட்டையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்து கொண்டனர்.
சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து முரசுமோட்டையில் இன்று போராட்டம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் முரசுமோட்டை பொதுச்சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை" நோக்கமாகக் கொண்டு மக்கள் அணியின் திரள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு நாள் செயல்திட்டத்தின் 17ம் நாளான இன்று கிளிநொச்சி முரசுமோட்டையில் முன்னெடுக்கப்பட்டது.குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்து கொண்டனர்.