• Apr 23 2026

சிறைச்சாலைக்குள் இருந்த மரத்தில் ஏறிக் குதித்த கைதி ; சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு!

shanu / Sep 16th 2025, 4:34 pm
image

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி  சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ஆம் திகதி  சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்ததில் காயமடைந்தார்.


காமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 


எனினும் அவரது உடல்நிலை  சுகவீனமடைய மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும், சிகிச்சை பலனின்றி  நேற்று (15) இரவு  அவர் உயிரிழந்துள்ளார்.


இது  தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலைக்குள் இருந்த மரத்தில் ஏறிக் குதித்த கைதி ; சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி  சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ஆம் திகதி  சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்ததில் காயமடைந்தார்.காமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை  சுகவீனமடைய மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும், சிகிச்சை பலனின்றி  நேற்று (15) இரவு  அவர் உயிரிழந்துள்ளார்.இது  தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement