• Aug 20 2025

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் முன்னெடுப்பு!

shanuja / Aug 19th 2025, 9:19 am
image

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 


19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 


எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும். இன்று எங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  


இது தொடர்பில் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவிக்கையில், 

தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. 


வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் முன்னெடுப்பு தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும். இன்று எங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவிக்கையில், தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement