• May 15 2025

உர மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார்! தப்பிஓடிய பிரதான சூத்திரதாரி

Chithra / May 15th 2025, 9:35 am
image

 

பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் மோசடி உர விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5500 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய 100இற்கு 21 வீதம் நைட்ரஜன் கலந்த உரத்தினை 100இற்கு 46வீதம் நைட்ரஜன் உள்ளடங்கியிருப்பதாக போலி லேபல்களை ஒட்டி ஒரு கும்பல் பொலன்னறுவை பிரதேசத்தில் விற்பனை செய்து வந்துள்ளது.

அவ்வாறு மோசடியாக லேபல் மாற்றப்பட்ட ஒரு மூடை உரம் 13,650 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலன்னறுவை பொலிஸார் குறித்த மோசடி உர விற்பனை களஞ்சியத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

அதன் போது  1565 உர மூட்டைகளும், அதிக விலை பொறிக்கப்பட்டு போலி லேபல் அச்சிடப்பட்ட 13500 உர பைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,

முகாமையாளர் உட்பட 12 ஊழியர்களும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பிச்சென்றுள்ளார். 

களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோசடி உர களஞ்சியசாலை உரிமையாளரின் மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


உர மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் தப்பிஓடிய பிரதான சூத்திரதாரி  பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் மோசடி உர விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.5500 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய 100இற்கு 21 வீதம் நைட்ரஜன் கலந்த உரத்தினை 100இற்கு 46வீதம் நைட்ரஜன் உள்ளடங்கியிருப்பதாக போலி லேபல்களை ஒட்டி ஒரு கும்பல் பொலன்னறுவை பிரதேசத்தில் விற்பனை செய்து வந்துள்ளது.அவ்வாறு மோசடியாக லேபல் மாற்றப்பட்ட ஒரு மூடை உரம் 13,650 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலன்னறுவை பொலிஸார் குறித்த மோசடி உர விற்பனை களஞ்சியத்தை சுற்றி வளைத்துள்ளனர்.அதன் போது  1565 உர மூட்டைகளும், அதிக விலை பொறிக்கப்பட்டு போலி லேபல் அச்சிடப்பட்ட 13500 உர பைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,முகாமையாளர் உட்பட 12 ஊழியர்களும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பிச்சென்றுள்ளார். களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோசடி உர களஞ்சியசாலை உரிமையாளரின் மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement