யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவித்திருந்தார்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம் வழங்க சென்ற அர்ச்சுனாவை கைது செய்த பொலிஸார்; கொழும்பில் சம்பவம் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார். அண்மையில் கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவித்திருந்தார். இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.