கென்யாவின் மண்டேரா (Mandera) விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 24) பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
விமானம் பலத்த சேதமடைந்த போதிலும், அதில் பயணம் செய்த 36 பேரும் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நைரோபியிலிருந்து (Nairobi) புறப்பட்ட EBB ஏர் விமானம், மண்டேரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
விமானத்தில் 32 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 36 பேர் இருந்தனர். ஓடுபாதையை விட்டு வெளியேறிய விமானம், அருகில் இருந்த புதர்க்காட்டுக்குள் புகுந்து நின்றது.
விபத்தில் விமானத்தின் வெளிப்புறப் பகுதி மற்றும் இறக்கைகள் கணிசமாகச் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கென்யா விமான நிலைய ஆணையம் விரைந்து செயல்பட்டு, மீட்புக் குழுவினர் மூலம் பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றியது. "விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று KAA அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை வழுக்கியதா அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஓடுபாதையை விட்டு விலகி புதருக்குள் புகுந்த விமானம்-நூலிழையில் தப்பிய பயணிகள் https://www.facebook.com/share/v/1KbLg8fFY8/கென்யாவின் மண்டேரா (Mandera) விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 24) பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானம் பலத்த சேதமடைந்த போதிலும், அதில் பயணம் செய்த 36 பேரும் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.நைரோபியிலிருந்து (Nairobi) புறப்பட்ட EBB ஏர் விமானம், மண்டேரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.விமானத்தில் 32 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 36 பேர் இருந்தனர். ஓடுபாதையை விட்டு வெளியேறிய விமானம், அருகில் இருந்த புதர்க்காட்டுக்குள் புகுந்து நின்றது.விபத்தில் விமானத்தின் வெளிப்புறப் பகுதி மற்றும் இறக்கைகள் கணிசமாகச் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கென்யா விமான நிலைய ஆணையம் விரைந்து செயல்பட்டு, மீட்புக் குழுவினர் மூலம் பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றியது. "விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று KAA அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை வழுக்கியதா அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.