நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு சுமார் 320,000 மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகிறது. வரலாற்றில் அதிகபட்ச பெரிய வெங்காய உற்பத்தி 2014ஆம் ஆண்டில் பதிவாகியிருந்ததுடன், அந்த ஆண்டில் சுமார் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து 100,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது.
எனினும், உற்பத்திச் செலவு அதிகரித்தமை மற்றும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையிலிருந்து விலகியுள்ளனர்.
இதனையடுத்து, விவசாயிகளை மீண்டும் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுத்தும் நோக்கில் சிறப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கருக்குப் பெறக்கூடிய பெரிய வெங்காய அறுவடையை அதிகரிப்பதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு சுமார் 320,000 மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகிறது. வரலாற்றில் அதிகபட்ச பெரிய வெங்காய உற்பத்தி 2014ஆம் ஆண்டில் பதிவாகியிருந்ததுடன், அந்த ஆண்டில் சுமார் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து 100,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது.எனினும், உற்பத்திச் செலவு அதிகரித்தமை மற்றும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையிலிருந்து விலகியுள்ளனர்.இதனையடுத்து, விவசாயிகளை மீண்டும் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுத்தும் நோக்கில் சிறப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கருக்குப் பெறக்கூடிய பெரிய வெங்காய அறுவடையை அதிகரிப்பதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.