ஜப்பான் நாட்டில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதுடன் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு ஆய்வில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கின்றது.
இந்த நிலையில் தற்போது ஆய்வில் வெளிவந்துள்ள புதிய தகவல் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஜப்பானில் சிறுவர்களை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜப்பானில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 14 இலட்சம் பேர் உள்ள நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 16 இலட்சமாக உள்ளது.
ஜப்பானில் தனியாக வசிக்கும் முதியோர் துணைக்கும், ஆறுதலுக்கும் செல்லப்பிராணிகளை அதிகளவில் வளர்ப்பதாக குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை- கொரோனா காலகட்டத்திற்குப் பின்னரே இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறைவடைந்த பிறப்பு வீதம் அதிகரித்த செல்லப்பிராணிகள் - ஜப்பானில் விசித்திரம் ஜப்பான் நாட்டில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதுடன் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு ஆய்வில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கின்றது.இந்த நிலையில் தற்போது ஆய்வில் வெளிவந்துள்ள புதிய தகவல் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜப்பானில் சிறுவர்களை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது. அதன்படி ஜப்பானில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 14 இலட்சம் பேர் உள்ள நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 16 இலட்சமாக உள்ளது.ஜப்பானில் தனியாக வசிக்கும் முதியோர் துணைக்கும், ஆறுதலுக்கும் செல்லப்பிராணிகளை அதிகளவில் வளர்ப்பதாக குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை- கொரோனா காலகட்டத்திற்குப் பின்னரே இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.