• Mar 10 2026

போதைப்பொருளுடன் கைதான நபர் - விசாரணையில் பல கொள்ளைச் சம்பவங்கள் அம்பலம்

Chithra / Feb 14th 2026, 12:36 pm
image


பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.


குறித்த ந்தேகநபர்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்தது. 


சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், 

பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, பேலியகொட, தெமட்டகொட, தலங்கம, கொத்தட்டுவ, மருதானை, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 08 மோட்டார் சைக்கிள் கொள்ளைகள் மற்றும் மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல சொத்துக் கொள்ளைகளை இவர் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. 


குறித்த சந்தேகநபர் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இவரால் திருடப்பட்ட சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட சொத்துக்களை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேகநபர் இன்று (14) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

போதைப்பொருளுடன் கைதான நபர் - விசாரணையில் பல கொள்ளைச் சம்பவங்கள் அம்பலம் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.குறித்த ந்தேகநபர்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்தது. சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, பேலியகொட, தெமட்டகொட, தலங்கம, கொத்தட்டுவ, மருதானை, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 08 மோட்டார் சைக்கிள் கொள்ளைகள் மற்றும் மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல சொத்துக் கொள்ளைகளை இவர் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரால் திருடப்பட்ட சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட சொத்துக்களை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று (14) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement