• Feb 03 2026

முத்துகுமாரசுவாமி மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இரங்கல்!

shanuja / Feb 2nd 2026, 5:26 pm
image


முத்துகுமாரசுவாமி  மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


தமிழ் தேசிய அரசியலில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த குமார் அண்ணா அவர்களின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது.


தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக தன் வாழ்நாளையே போராட்டமாக மாற்றிய தம்பித்துரை முத்துகுமாரசுவாமி அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி எமது இதயங்களை ஆழ்ந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


மாணவர் பருவத்திலிருந்தே போராட்ட வாழ்வியலைத் தேர்ந்தெடுத்த திரு. குமார் அவர்கள், தனது இறுதி மூச்சு வரை ஈழத் தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்தும் செயல்பட்டும் வந்தார். அவரது இந்த தொடர்ச்சியான அரசியல் செயல்பாடு இன்று நிறுத்தம் பெற்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.


ஆரம்ப காலத்தில் சாதி ஒழிப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்ற அவர், தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்ட அந்த வரலாற்றுத் தருணத்தில் அதன் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

தியாகி பொன். சிவகுமாருடன் தோளோடு தோள் நின்று தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்ததும், வாக்கு–கட்சி அரசியலைக் கடந்த ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை கட்டியமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டதும் வரலாற்றுப் பதிவுகளாகும்.


1968 ஆம் ஆண்டு “ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்” உருவாகக் காரணமான முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைய தலைமுறையின் அரசியல் தலைமைத்துவம் உருவான முதல் படியாகும். அவரது தந்தை நீதிபதி தம்பித்துரை அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்தபோதும், கட்சி கடந்த அரசியல் பயணமே தமிழின விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தீர்க்கதரிசனத்துடன் அவர் பயணித்தார். ஒரே கூரையின் கீழ், மேல்மாடியில் தமிழரசுக் கட்சி கூட்டமும், கீழ்மாடியில் விடுதலை இயக்கக் கூட்டமும் நடந்த அந்த வரலாற்றுச் சம்பவம் இதற்கான சாட்சி. 1972 ஆம் 


ஆண்டு தனது தீவிர அரசியல் செயல்பாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டு, யாழ் கோட்டையிலும் பின்னர் கொழும்பு போகன்பரா சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே சட்டக் கல்வியைத் தொடங்கிய அவர், விடுதலையின் பின் கொழும்பு சட்டக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.


1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள காடையர்களால் நடத்தப்பட்ட இனவன்முறையின் போது, கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட அகதி முகாமை பொறுப்பேற்று நிர்வகித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார். லங்காரணி கப்பல் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பாதுகாப்பாக தாயகம் திரும்பச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.


அமெரிக்காவிற்கு சென்ற பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பிலடெல்பியா நகரத்தின் தேர்தல் கண்காணிப்பாளராகவும், Peace Brigades International அமைப்பின் ஐ.நா பிரதிநிதியாகவும், தொடர்ந்து Amnesty International அமைப்பின் சர்வதேச பரப்புரை இயக்குநராக 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.


The Carter Center மற்றும் OSCE அமைப்புகளின் ஊடாக தென் சூடான், கிழக்கு தீமோர், மொண்டிநீகிரோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற சுதந்திர பொதுவாக்கெடுப்புகளில் சர்வதேச நிபுணராக முக்கிய பங்கு வகித்தார்.


2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசின் இனவழிப்பு யுத்தம் உச்சம் பெற்றபோது, பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட உயர்மட்ட சர்வதேச முயற்சிகள் வரலாற்றில் மறக்க முடியாதவை. அந்த முயற்சிகள் பிராந்திய வல்லரசின் அரசியல் சதியால் கைகூடாத போதிலும், அவர் நீதிக்கான போராட்டத்தை கைவிடவில்லை.


தமிழீழத்தை அடைவதற்கான பொது வாக்கெடுப்பு மூலோபாயத்தின் பிதாமகன் அவரே. நாடு கடந்த தமிழீழ அரசின் தொடக்க காலம் முதலே அதன் முதன்மை ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.


அடக்குமுறை, இன ஒடுக்கல், அரசியல் வஞ்சகம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் எப்போதும் அடக்குமுறை, இன ஒடுக்கல், அரசியல் வஞ்சகம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் எப்போதும் சமரசமற்ற குரலாக நின்றார். தனது இளம் பருவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்ற அனுபவத்தினால், கிழக்கு மாகாணம் தொடர்பான ஆழமான புரிதலை கொண்டிருந்தார். எந்த விடயத்திலும், வடக்கு கிழக்கு சமநிலை, ஆண் பெண் சமத்துவம், மதங்களின் சமத்துவம் என்பவற்றில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டார். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க 


வெளிநாட்டு கொள்கை வட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மேடைகளில், தமிழ் மக்களின் வேதனைகளையும் நீதி கோரலையும் உலகம் கேட்கும் வகையில் எடுத்துச் சென்ற போராளி அவர்.


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் முன்னெடுத்த அறவழிப் போராட்டங்களுக்கு அவர் வழங்கிய அரசியல் ஆதரவும், திசைகாட்டும் வழிகாட்டுதலும் எமது போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத தடயமாகும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்ட ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட சிறீலங்கா அரசின் ஒடுக்குமுறையை சர்வதேச இராஜதந்திர வழிமுறைகள் மூலம் உடைத்தெறிந்து மக்கள் அலை என திரள வழி ஏற்படுத்தி கொடுத்தவர். தாயகத்தில் யாராவது அரசியல் கைது செய்யப்பட்டால், வயதான காலத்திலும், இரவு பகல் பாராது அவர்களை விடுதலை செய்வதற்கு பாடு படுபவர். அன்னாரின் இறுதி நாட்கள் வரை தாயக மண்ணுடன் இடைவிடாத தொடர்புடன், இடைவிடாது பணியாற்றியவர். அவர் நம்மிடம் விட்டுச் சென்றது நினைவுகள் மட்டும் அல்ல — போராட வேண்டிய கடமையும், பின்னடையக் கூடாத பொறுப்பும் ஆகும்.


அவரது மறைவு ஒரு முடிவல்ல. அது எமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் அழைப்பு. அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், மக்களுக்கும்எமது புரட்சிகர இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது. 

முத்துகுமாரசுவாமி மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இரங்கல் முத்துகுமாரசுவாமி  மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய அரசியலில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த குமார் அண்ணா அவர்களின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது.தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக தன் வாழ்நாளையே போராட்டமாக மாற்றிய தம்பித்துரை முத்துகுமாரசுவாமி அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி எமது இதயங்களை ஆழ்ந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.மாணவர் பருவத்திலிருந்தே போராட்ட வாழ்வியலைத் தேர்ந்தெடுத்த திரு. குமார் அவர்கள், தனது இறுதி மூச்சு வரை ஈழத் தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்தும் செயல்பட்டும் வந்தார். அவரது இந்த தொடர்ச்சியான அரசியல் செயல்பாடு இன்று நிறுத்தம் பெற்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.ஆரம்ப காலத்தில் சாதி ஒழிப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்ற அவர், தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்ட அந்த வரலாற்றுத் தருணத்தில் அதன் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தார்.தியாகி பொன். சிவகுமாருடன் தோளோடு தோள் நின்று தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்ததும், வாக்கு–கட்சி அரசியலைக் கடந்த ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை கட்டியமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டதும் வரலாற்றுப் பதிவுகளாகும்.1968 ஆம் ஆண்டு “ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்” உருவாகக் காரணமான முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைய தலைமுறையின் அரசியல் தலைமைத்துவம் உருவான முதல் படியாகும். அவரது தந்தை நீதிபதி தம்பித்துரை அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்தபோதும், கட்சி கடந்த அரசியல் பயணமே தமிழின விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தீர்க்கதரிசனத்துடன் அவர் பயணித்தார். ஒரே கூரையின் கீழ், மேல்மாடியில் தமிழரசுக் கட்சி கூட்டமும், கீழ்மாடியில் விடுதலை இயக்கக் கூட்டமும் நடந்த அந்த வரலாற்றுச் சம்பவம் இதற்கான சாட்சி. 1972 ஆம் ஆண்டு தனது தீவிர அரசியல் செயல்பாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டு, யாழ் கோட்டையிலும் பின்னர் கொழும்பு போகன்பரா சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே சட்டக் கல்வியைத் தொடங்கிய அவர், விடுதலையின் பின் கொழும்பு சட்டக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள காடையர்களால் நடத்தப்பட்ட இனவன்முறையின் போது, கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட அகதி முகாமை பொறுப்பேற்று நிர்வகித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார். லங்காரணி கப்பல் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பாதுகாப்பாக தாயகம் திரும்பச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.அமெரிக்காவிற்கு சென்ற பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பிலடெல்பியா நகரத்தின் தேர்தல் கண்காணிப்பாளராகவும், Peace Brigades International அமைப்பின் ஐ.நா பிரதிநிதியாகவும், தொடர்ந்து Amnesty International அமைப்பின் சர்வதேச பரப்புரை இயக்குநராக 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.The Carter Center மற்றும் OSCE அமைப்புகளின் ஊடாக தென் சூடான், கிழக்கு தீமோர், மொண்டிநீகிரோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற சுதந்திர பொதுவாக்கெடுப்புகளில் சர்வதேச நிபுணராக முக்கிய பங்கு வகித்தார்.2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசின் இனவழிப்பு யுத்தம் உச்சம் பெற்றபோது, பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட உயர்மட்ட சர்வதேச முயற்சிகள் வரலாற்றில் மறக்க முடியாதவை. அந்த முயற்சிகள் பிராந்திய வல்லரசின் அரசியல் சதியால் கைகூடாத போதிலும், அவர் நீதிக்கான போராட்டத்தை கைவிடவில்லை.தமிழீழத்தை அடைவதற்கான பொது வாக்கெடுப்பு மூலோபாயத்தின் பிதாமகன் அவரே. நாடு கடந்த தமிழீழ அரசின் தொடக்க காலம் முதலே அதன் முதன்மை ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.அடக்குமுறை, இன ஒடுக்கல், அரசியல் வஞ்சகம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் எப்போதும் அடக்குமுறை, இன ஒடுக்கல், அரசியல் வஞ்சகம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் எப்போதும் சமரசமற்ற குரலாக நின்றார். தனது இளம் பருவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்ற அனுபவத்தினால், கிழக்கு மாகாணம் தொடர்பான ஆழமான புரிதலை கொண்டிருந்தார். எந்த விடயத்திலும், வடக்கு கிழக்கு சமநிலை, ஆண் பெண் சமத்துவம், மதங்களின் சமத்துவம் என்பவற்றில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டார். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மேடைகளில், தமிழ் மக்களின் வேதனைகளையும் நீதி கோரலையும் உலகம் கேட்கும் வகையில் எடுத்துச் சென்ற போராளி அவர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் முன்னெடுத்த அறவழிப் போராட்டங்களுக்கு அவர் வழங்கிய அரசியல் ஆதரவும், திசைகாட்டும் வழிகாட்டுதலும் எமது போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத தடயமாகும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்ட ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட சிறீலங்கா அரசின் ஒடுக்குமுறையை சர்வதேச இராஜதந்திர வழிமுறைகள் மூலம் உடைத்தெறிந்து மக்கள் அலை என திரள வழி ஏற்படுத்தி கொடுத்தவர். தாயகத்தில் யாராவது அரசியல் கைது செய்யப்பட்டால், வயதான காலத்திலும், இரவு பகல் பாராது அவர்களை விடுதலை செய்வதற்கு பாடு படுபவர். அன்னாரின் இறுதி நாட்கள் வரை தாயக மண்ணுடன் இடைவிடாத தொடர்புடன், இடைவிடாது பணியாற்றியவர். அவர் நம்மிடம் விட்டுச் சென்றது நினைவுகள் மட்டும் அல்ல — போராட வேண்டிய கடமையும், பின்னடையக் கூடாத பொறுப்பும் ஆகும்.அவரது மறைவு ஒரு முடிவல்ல. அது எமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் அழைப்பு. அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், மக்களுக்கும்எமது புரட்சிகர இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement