• Feb 03 2026

விஞ்ஞான ஆய்வுகூட உபகரண வளங்களைக் கொண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும்!

shanuja / Feb 2nd 2026, 5:49 pm
image

மலையகத்தில் விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணத் தொகுதிகளை வழங்குகின்றோம். அதன் ஊடாக மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்க அதிபர் ஆசிரியர்கள் அக்கறை செலுத்தி கற்பிக்க வேண்டும் என அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.


ஹட்டன் கல்வி வலயம் மற்றும் இரத்தினபுரி கல்வி வலயங்களைச் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளைக் கொண்ட 15 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு சுமார் 40 இலட்ச ரூபா செலவில் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணத் தொகுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (31) ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றபோது தலைமை வகித்துப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், 


அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பணிப்பாளர் சபையில்  திறமை வாய்ந்த  வைத்தியக் கலாநிதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களைப் போல மலையகத்தில் விஞ்ஞானத் துறையில் மாணவர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வுகூட உபகரணங்கள் வழங்கப்படுவதால் பாடசாலைகளுக்கு மேலும் வசதிகள் கிடைத்துள்ளன. எமது சேவை இலங்கையில் 6 மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், சுயதொழில் வாய்ப்பு முதலான 14 வகையான அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் ஊடாக இடம்பெற்று வருகின்றது.


எமது அமைப்பின் தலைவர் வைத்தியக் கலாநிதி ராஜம் தேவேந்திரன் அம்மையார் தலைமையில் அமெரிக்காவைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் நித்திஷ் சிவா ஆகியோரின் நிதி நன்கொடையின் ஊடாக இந்த உபகரணங்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. மாணவர்களின் சிறந்த  பெறுபேறுகளே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.


மஸ்கெலியா வைத்தியசாலையில் இரண்டு தாதியரைத் தவிர,  ஏனைய அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எமது பிள்ளைகள் விஞ்ஞான பாடத்தில் சித்தி பெறும் பட்சத்தில் அதுசார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறக் கூடியதாக இருக்கும். அத்தோடு தொழிலுக்கு ஏற்ற கல்வியை ஒவொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


கணித, விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறுவோருக்கும் மாதாந்தம் புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு புலமைப் பரிசில் பெற்று சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அண்மையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை பெருமை தரும் விடயமாகும்.


அடுத்து வரும் வாரங்களில் ஒரு பாடசாலைக்கு 5 கணிணிகள் வீதம் 50 க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு கணிணி உபகரணத் தொகுதிகளை வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் பயிற்சி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


விஞ்ஞான ஆய்வுகூட உபகரண வளங்களைக் கொண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் மலையகத்தில் விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணத் தொகுதிகளை வழங்குகின்றோம். அதன் ஊடாக மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்க அதிபர் ஆசிரியர்கள் அக்கறை செலுத்தி கற்பிக்க வேண்டும் என அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.ஹட்டன் கல்வி வலயம் மற்றும் இரத்தினபுரி கல்வி வலயங்களைச் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளைக் கொண்ட 15 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு சுமார் 40 இலட்ச ரூபா செலவில் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணத் தொகுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (31) ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றபோது தலைமை வகித்துப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பணிப்பாளர் சபையில்  திறமை வாய்ந்த  வைத்தியக் கலாநிதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களைப் போல மலையகத்தில் விஞ்ஞானத் துறையில் மாணவர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வுகூட உபகரணங்கள் வழங்கப்படுவதால் பாடசாலைகளுக்கு மேலும் வசதிகள் கிடைத்துள்ளன. எமது சேவை இலங்கையில் 6 மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், சுயதொழில் வாய்ப்பு முதலான 14 வகையான அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் ஊடாக இடம்பெற்று வருகின்றது.எமது அமைப்பின் தலைவர் வைத்தியக் கலாநிதி ராஜம் தேவேந்திரன் அம்மையார் தலைமையில் அமெரிக்காவைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் நித்திஷ் சிவா ஆகியோரின் நிதி நன்கொடையின் ஊடாக இந்த உபகரணங்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. மாணவர்களின் சிறந்த  பெறுபேறுகளே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.மஸ்கெலியா வைத்தியசாலையில் இரண்டு தாதியரைத் தவிர,  ஏனைய அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எமது பிள்ளைகள் விஞ்ஞான பாடத்தில் சித்தி பெறும் பட்சத்தில் அதுசார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறக் கூடியதாக இருக்கும். அத்தோடு தொழிலுக்கு ஏற்ற கல்வியை ஒவொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.கணித, விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறுவோருக்கும் மாதாந்தம் புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு புலமைப் பரிசில் பெற்று சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அண்மையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை பெருமை தரும் விடயமாகும்.அடுத்து வரும் வாரங்களில் ஒரு பாடசாலைக்கு 5 கணிணிகள் வீதம் 50 க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு கணிணி உபகரணத் தொகுதிகளை வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் பயிற்சி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement