பருத்தித்துறை நகர சபையின் 2025 ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரபேற்புரை தலைமை உரை என்பன இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் ஆகியோருக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் பருத்தித்துறை நகரசபை செயலாளர் அ. அ. நடராசா, உப தவிசாளர் தேவராஜேந்திரம், உறுப்பினர்களான ஜெயாநந்தம் ஜெயகோபி,திருஞானசம்பந்தர் சந்திரசேகரன், சிறிகண்ணன் சிறிபிரகாஸ், மரியராசநாயகம் அனல்ரெஜி, ராசேந்திரம் விமலேந்திரன், சிவலிங்கம் பொன்னம்பலம்,
நடராசா கணநாதன், செபாஸ்ரியாம்பிபிள்ளை ரெஜினா, திருச்செல்வம் மேரி ரெஜினா, நடராசா நிறஞ்சன், வியயரத்தினம் வியயக்குமார் உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.
இதேவேளை பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார உதவியாக 8 பெண்களுக்கு zoje தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பிரதேச மக்கள் நலன் விரும்பிகள், பொது மக்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்
பருத்தித்துறை நகர சபையின் 2025 ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு பருத்தித்துறை நகர சபையின் 2025 ம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.தொடர்ந்து வரவேற்பு நடனம், வரபேற்புரை தலைமை உரை என்பன இடம்பெற்றன.அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் ஆகியோருக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் பருத்தித்துறை நகரசபை செயலாளர் அ. அ. நடராசா, உப தவிசாளர் தேவராஜேந்திரம், உறுப்பினர்களான ஜெயாநந்தம் ஜெயகோபி,திருஞானசம்பந்தர் சந்திரசேகரன், சிறிகண்ணன் சிறிபிரகாஸ், மரியராசநாயகம் அனல்ரெஜி, ராசேந்திரம் விமலேந்திரன், சிவலிங்கம் பொன்னம்பலம், நடராசா கணநாதன், செபாஸ்ரியாம்பிபிள்ளை ரெஜினா, திருச்செல்வம் மேரி ரெஜினா, நடராசா நிறஞ்சன், வியயரத்தினம் வியயக்குமார் உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர். இதேவேளை பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார உதவியாக 8 பெண்களுக்கு zoje தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பிரதேச மக்கள் நலன் விரும்பிகள், பொது மக்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்