அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் (ஜே.பி.) மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும், அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஊடகத்துறையில் இன, மத வேறுபாடின்றி சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தவருமான ஏ.எல்.எம். சலீமின் சேவைகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான வி.ரி. சகாதேவராஜா, எஸ். பேரின்பராஜா, சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா, தொழிற்சங்கத்தின் ஆலோசகர் செ. இராசையா உள்ளிட்ட சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மூத்த ஊடகவியலாளர் சலீமுக்கு காரைதீவில் உணர்வுபூர்வ அஞ்சலி அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் (ஜே.பி.) மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும், அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஊடகத்துறையில் இன, மத வேறுபாடின்றி சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தவருமான ஏ.எல்.எம். சலீமின் சேவைகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான வி.ரி. சகாதேவராஜா, எஸ். பேரின்பராஜா, சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா, தொழிற்சங்கத்தின் ஆலோசகர் செ. இராசையா உள்ளிட்ட சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.