இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, சாத்தக்கோன்வலசை கடற்கரை பகுதியில் இன்று (02) அதிகாலை மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற பட்டாரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
வாகனத்தை சோதனையிட்டபோது, 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சிங்கிவளைகுச்சி கடற்கரை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு ரோந்து நடவடிக்கையின்போது, கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றை சோதனையிட்டபோது, மொத்தமாக 286 கிலோ பீடி இலைகள் இருந்தமை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக கடற்கரையில் சிக்கிய பார்சல்கள் – இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருட்கள் சிக்கியது எப்படி இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, சாத்தக்கோன்வலசை கடற்கரை பகுதியில் இன்று (02) அதிகாலை மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற பட்டாரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.வாகனத்தை சோதனையிட்டபோது, 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை, சிங்கிவளைகுச்சி கடற்கரை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு ரோந்து நடவடிக்கையின்போது, கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவற்றை சோதனையிட்டபோது, மொத்தமாக 286 கிலோ பீடி இலைகள் இருந்தமை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குறித்த வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.