கம்பஹா - சப்புகஸ்கந்தையில் உள்ள மாகொல சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற 15 சிறுவர்களில் 05 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் தற்போது மாகொல சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் காவலில் இருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் குறித்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தப்பிச் சென்ற 15 சிறுவர்களில் 4 பேரைத் தவிர 11 பேரும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தப்பியோடியவர்களில் இருவர் இதற்கு முன்பும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற 15 சிறுவர்களில் 05 பேர் கைது கம்பஹா - சப்புகஸ்கந்தையில் உள்ள மாகொல சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற 15 சிறுவர்களில் 05 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர்கள் தற்போது மாகொல சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் காவலில் இருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் குறித்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தப்பிச் சென்ற 15 சிறுவர்களில் 4 பேரைத் தவிர 11 பேரும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், தப்பியோடியவர்களில் இருவர் இதற்கு முன்பும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.