• Sep 30 2025

சம்பூர் கடலில் மாயமான மீனவர்; தேடும் பணிகள் 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது!

shanuja / Sep 30th 2025, 11:17 am
image

மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று  நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரைத் தேடும் பணி இன்று (30) செவ்வாய்கிழமை 2வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


மூதூரிலிலுள்ள சுமார் 50 படகுகளில் தேடும்பணி இடம்பெற்று வருகிறது. எனினும் இதுவரை குறித்த மீனவர்  மீட்கப்படவில்லை.


சம்பூர் - சூடைக்குடா கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்தார். 


இச்சம்பவத்தில் யுனைதீன் அனஸ் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே  காணாமல் போயுள்ளதாகவும் முகமது ஜாபீர் முகமது பைசர் (வயது 28) என்பவரே உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு சம்பூர் - சூடைக்குடா கடற்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திங்கட்கிழமை (29) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த படகு காற்றின் காரணமாக கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன்போது ஒருவர் மண்ணெண்ணை கேனை பிடித்துக் கொண்டு நீந்தி அதிகாலை 5.00 மணியளவில் ஒரு மீனவர் கரையை வந்தடைந்துள்ளதுள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பாக உயிர் தப்பியவர் வழங்கிய தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த படகு (29) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போயுள்ள மூதூர் 01, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த யுனைதீன் அனஸ் (வயது 40) என்ற மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பூர் கடலில் மாயமான மீனவர்; தேடும் பணிகள் 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று  நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரைத் தேடும் பணி இன்று (30) செவ்வாய்கிழமை 2வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.மூதூரிலிலுள்ள சுமார் 50 படகுகளில் தேடும்பணி இடம்பெற்று வருகிறது. எனினும் இதுவரை குறித்த மீனவர்  மீட்கப்படவில்லை.சம்பூர் - சூடைக்குடா கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்தார். இச்சம்பவத்தில் யுனைதீன் அனஸ் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே  காணாமல் போயுள்ளதாகவும் முகமது ஜாபீர் முகமது பைசர் (வயது 28) என்பவரே உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு சம்பூர் - சூடைக்குடா கடற்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திங்கட்கிழமை (29) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த படகு காற்றின் காரணமாக கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஒருவர் மண்ணெண்ணை கேனை பிடித்துக் கொண்டு நீந்தி அதிகாலை 5.00 மணியளவில் ஒரு மீனவர் கரையை வந்தடைந்துள்ளதுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக உயிர் தப்பியவர் வழங்கிய தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த படகு (29) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போயுள்ள மூதூர் 01, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த யுனைதீன் அனஸ் (வயது 40) என்ற மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement