மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபான சாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.
நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு, போதையை ஒழிப்போம், அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேண்டாம் வேண்டாம் சாவு வேண்டாம், எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த நெடுந்தீவு மக்கள் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபான சாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு, போதையை ஒழிப்போம், அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேண்டாம் வேண்டாம் சாவு வேண்டாம், எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.