• May 09 2025

உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை!- நாமல் அறிவிப்பு

Chithra / May 8th 2025, 8:06 am
image


எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கட்சி என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தோம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவரை கூட களமிறக்குவற்கு முடியாத நிலைமை காணப்பட்டது.

கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக  நெருக்கடியான நிலையில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்தோம்.

கட்சி பாதுகாக்கப்பட்டதால் தான் இன்று எம்மால் தேர்தலில் சுயாதீனமான முறையில் போட்டியிட முடிந்துள்ளது. 

ஜனாதிபதித்  தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பெறுபேற்றைக் காட்டிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில்  முன்னேற்றமடைந்துள்ளோம்.

ஒருசில உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட அரசியல் அனுபவத்துக்கு அமைய அழைப்பு விடுத்துள்ளார்.இந்த விடயத்தை நாங்கள் விரிவாக பரிசீலிப்போம்என்றார்.

உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை- நாமல் அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கட்சி என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தோம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவரை கூட களமிறக்குவற்கு முடியாத நிலைமை காணப்பட்டது.கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக  நெருக்கடியான நிலையில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்தோம்.கட்சி பாதுகாக்கப்பட்டதால் தான் இன்று எம்மால் தேர்தலில் சுயாதீனமான முறையில் போட்டியிட முடிந்துள்ளது. ஜனாதிபதித்  தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பெறுபேற்றைக் காட்டிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில்  முன்னேற்றமடைந்துள்ளோம்.ஒருசில உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட அரசியல் அனுபவத்துக்கு அமைய அழைப்பு விடுத்துள்ளார்.இந்த விடயத்தை நாங்கள் விரிவாக பரிசீலிப்போம்என்றார்.

Advertisement

Advertisement

Advertisement