மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 24ஆம் திகதி அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, 24ஆம் திகதி பிற்பகல் முதல் நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
23ஆம் திகதி இரவு முதல் 24ஆம் திகதி பிற்பகல் வரை ஒரு நீர் வெளியேற்றும் கதவு திறந்திருந்த நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மற்றுமொரு கதவும் தானாகத் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய நீர் வெளியேற்றும் கதவுகளும் தானாகத் திறக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 24ஆம் திகதி அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, 24ஆம் திகதி பிற்பகல் முதல் நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.23ஆம் திகதி இரவு முதல் 24ஆம் திகதி பிற்பகல் வரை ஒரு நீர் வெளியேற்றும் கதவு திறந்திருந்த நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மற்றுமொரு கதவும் தானாகத் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய நீர் வெளியேற்றும் கதவுகளும் தானாகத் திறக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.