வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு நாடும் அதன் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் அதன் மீது கட்டியெழுப்புவதன் மூலமே அந்த வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறது.
ஒரு நாடாக, நாமும் நமது வரலாற்று பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நமது சமூகத்தை ஒரு கலாசார சமூகமாக மாற்ற புத்த மதம் உதவியது என்றும், பௌதீக வளங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கும் சமூகத்தில், மறைந்து வரும் சமூக மதிப்புகள் மற்றும் பண்புகள் மீண்டும் மீட்சிபெற, இவ்வாறான கலாசார நிகழ்வுகள் வாயப்பளிக்கிறது என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்டையில் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் ஜனாதிபதி வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு நாடும் அதன் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் அதன் மீது கட்டியெழுப்புவதன் மூலமே அந்த வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறது.ஒரு நாடாக, நாமும் நமது வரலாற்று பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.நமது சமூகத்தை ஒரு கலாசார சமூகமாக மாற்ற புத்த மதம் உதவியது என்றும், பௌதீக வளங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கும் சமூகத்தில், மறைந்து வரும் சமூக மதிப்புகள் மற்றும் பண்புகள் மீண்டும் மீட்சிபெற, இவ்வாறான கலாசார நிகழ்வுகள் வாயப்பளிக்கிறது என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.