• Oct 07 2026

இலங்கையில் இணையவழி சூதாட்டம்; எட்டு இந்தியர்கள் கைது!

Chithra / Oct 6th 2026, 1:06 pm
image

 

பணத்திற்காக சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு இந்தியப் பிரஜைகள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த சிலர், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடுவெல நீதிவான் நீதிமன்றத்திடமிருந்து தேடுதல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.


அதன்படி, குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நேற்று (5) குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.


இதன்போது, அங்கு தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்ததுடன், ஆறு கணினிகள், 39 கைபேசிகள் மற்றும் பல்வேறு கணினி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைப்பட்ட இந்தியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இணையவழி சூதாட்டம்; எட்டு இந்தியர்கள் கைது  பணத்திற்காக சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு இந்தியப் பிரஜைகள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த சிலர், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடுவெல நீதிவான் நீதிமன்றத்திடமிருந்து தேடுதல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.அதன்படி, குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நேற்று (5) குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.இதன்போது, அங்கு தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்ததுடன், ஆறு கணினிகள், 39 கைபேசிகள் மற்றும் பல்வேறு கணினி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைப்பட்ட இந்தியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement