• Aug 19 2025

இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலி - சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு

Chithra / Aug 19th 2025, 10:25 am
image

புத்தளம், கல்பிட்டி பகுதியில் நேற்று  இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உட்பட ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

சம்பவத்தில் காயமடைந்தவர் 37 வயது நபர் கல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலி - சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு புத்தளம், கல்பிட்டி பகுதியில் நேற்று  இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உட்பட ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சம்பவத்தில் காயமடைந்தவர் 37 வயது நபர் கல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement