'ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை தலவாக்கலையில் மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளோம். அதில் மே முதலாம் திகதி நாம் மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்
அட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. உள்ளூராட்சிசபைகளையும் கைப்பற்றுவதற்கு தற்போது முழு வீச்சுடன் செயற்படுகின்றது.
ஜனாதிபதி தலவாக்கலைக்கு வருகை தந்திருந்தார். மலையக மக்களுக்கான 10 பேர் காணி உரிமை பற்றி எதுவும் பேசவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் கம்பனிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த மே தினத்தன்று ரணில் விக்கிரமசிங்கவும், இத்தொகாவினரும் தலவாக்கலையில் விடுத்த அறிவிப்பைதான், ஜனாதிபதியும் தலவாக்கலைக்கு வந்து கூறிவிட்டுச் சென்றார். சென்றுள்ளார்.
மீண்டும், மீண்டும் பொய்யுரைப்பதால், பொய் உண்மையாகப்போவதில்லை. எனவே, கம்பனிகளுடன் பேச்சு நடத்துங்கள். இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்னர் மக்களுக்கு உறுதிமொழியை வழங்குங்கள்.
நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்
மே முதலாம் தேதி நாம் பெருமளவு மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும்." - என்றார்.
மே முதலாம் திகதி மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும் - இராதாகிருஷ்ணன் எம்.பி பகிரங்கம் 'ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை தலவாக்கலையில் மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளோம். அதில் மே முதலாம் திகதி நாம் மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்அட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியவை வருமாறு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. உள்ளூராட்சிசபைகளையும் கைப்பற்றுவதற்கு தற்போது முழு வீச்சுடன் செயற்படுகின்றது. ஜனாதிபதி தலவாக்கலைக்கு வருகை தந்திருந்தார். மலையக மக்களுக்கான 10 பேர் காணி உரிமை பற்றி எதுவும் பேசவில்லை.தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் கம்பனிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த மே தினத்தன்று ரணில் விக்கிரமசிங்கவும், இத்தொகாவினரும் தலவாக்கலையில் விடுத்த அறிவிப்பைதான், ஜனாதிபதியும் தலவாக்கலைக்கு வந்து கூறிவிட்டுச் சென்றார். சென்றுள்ளார்.மீண்டும், மீண்டும் பொய்யுரைப்பதால், பொய் உண்மையாகப்போவதில்லை. எனவே, கம்பனிகளுடன் பேச்சு நடத்துங்கள். இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்னர் மக்களுக்கு உறுதிமொழியை வழங்குங்கள்.நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்மே முதலாம் தேதி நாம் பெருமளவு மக்களை திரட்டி எமது பலத்தை காட்ட வேண்டும்." - என்றார்.