இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, "இலங்கையை கட்டியெழுப்புதல்" என்ற கருப்பொருளின் கீழ், 2026 பெப்பரவரி 04 ஆம் திகதி மதியம் 12:00 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலான சயுரவிலிருந்து 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்த இலங்கை கடற்படை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளான 1948 பெப்பரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ரோயல் கடற்படை முதன்முதலில் துப்பாக்கி வணக்கம் செலுத்தியதுடன், அப்போதிருந்து சுதந்திர தினத்தன்று இலங்கை தேசத்தின் சார்பாக 25 துப்பாக்கி வணக்கங்களைச் செலுத்தும் பாரம்பரியத்தை கடற்படை தொடர்கிறது.
மேலும், நாளை (2026 பெப்பரவரி 04,) 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு வணக்கத்தை பொதுமக்கள் ஊடகங்கள் மூலம் நேரடியாகப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதடன் மேலும் காலி முகத்திடலில் இருந்து நிகழ்வைப் பார்க்கவும் முடியும்.
சுதந்திர தினத்தில் காலி முகத்திடலில் கடற்படையினரால் 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, "இலங்கையை கட்டியெழுப்புதல்" என்ற கருப்பொருளின் கீழ், 2026 பெப்பரவரி 04 ஆம் திகதி மதியம் 12:00 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலான சயுரவிலிருந்து 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்த இலங்கை கடற்படை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளான 1948 பெப்பரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ரோயல் கடற்படை முதன்முதலில் துப்பாக்கி வணக்கம் செலுத்தியதுடன், அப்போதிருந்து சுதந்திர தினத்தன்று இலங்கை தேசத்தின் சார்பாக 25 துப்பாக்கி வணக்கங்களைச் செலுத்தும் பாரம்பரியத்தை கடற்படை தொடர்கிறது. மேலும், நாளை (2026 பெப்பரவரி 04,) 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு வணக்கத்தை பொதுமக்கள் ஊடகங்கள் மூலம் நேரடியாகப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதடன் மேலும் காலி முகத்திடலில் இருந்து நிகழ்வைப் பார்க்கவும் முடியும்.