கந்தளாய் - அக்போபுர பகுதியில் விபத்து ஒன்றைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது லொறி சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, நேற்று (06) இரவு கித்துல்ஊற்று பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சாரதியின் நித்திரை கலக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதே சாரதி முன்னதாக சூரியபுர பகுதியில் ஏற்படுத்திய விபத்தையும் குறித்த ஊடகவியலாளரே அறிக்கையிட்டிருந்தார்.
இன்று (07) காலை விபத்துப் பகுதியை ஊடகவியலாளர் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்ட சாரதியும் உதவியாளரும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பழைய பகை, திட்டமிட்டு தாக்கப்பட்ட ஊடகவியலாளர் -லொறி சாரதியின் அடாவடி கந்தளாய் - அக்போபுர பகுதியில் விபத்து ஒன்றைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது லொறி சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, நேற்று (06) இரவு கித்துல்ஊற்று பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. சாரதியின் நித்திரை கலக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.இதே சாரதி முன்னதாக சூரியபுர பகுதியில் ஏற்படுத்திய விபத்தையும் குறித்த ஊடகவியலாளரே அறிக்கையிட்டிருந்தார்.இன்று (07) காலை விபத்துப் பகுதியை ஊடகவியலாளர் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்ட சாரதியும் உதவியாளரும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.