• Sep 08 2025

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

Chithra / Sep 8th 2025, 1:24 pm
image

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கான தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த மனு மீதான விசாரணை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கான தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மனு மீதான விசாரணை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement