• Feb 27 2026

புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் - ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நாளை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

shanuja / Feb 26th 2026, 4:30 pm
image

நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டமோ உருவாக்கப்படும் PSTA  சட்டமோ எதுவும் எமக்கு வேண்டாம் என்ற கோரிக்கையுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட

மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணக் கையளிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் கையளிக்கப்பட்டது.


பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்கக் கோரியும், புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிகழ்வும், ஊடக சந்திப்பும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இன்று நண்பகல் வேலன் சுவாமி தலைமையில் இடம்பெறும்.


கடந்த 14.02.2026 முதல் 25.02.2026 வரையான காலப் பகுதியில் கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை ஆகிய மாவட்டங்களிலு. வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வாவட்டங்களிலும் பொது அமைப்பினராலும், நிறுவனங்களாலும் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்களின் பட்டியலே இதன்போது கையளிக்கப்பட்டது.


புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்ற வலியுறுத்தல் கோரிக்கையை முன்னிறுத்தும்  இந்த போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் பிரதினிதிகள் -


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் இரத்து செய்யப்படும் என்று இந்த அரசு ஆட்சிக்கு வரும்போது தெளிவாகக் கூறியிருந்தது.


இருப்பினும், PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வையில், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) முன்வைக்கப்பட்மை, மக்கள் விரோதமாகவும் எதிரான செயலாகவும் இருக்கின்றது.


PTA -வின் கீழ் பல ஆண்டுகளாக நியாயமற்ற வகையில் பலர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 


அதிலிருந்து  விடுவிக்கப்பட்ட நபர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் அனுபவித்த அநீதிகளுக்கு சமூக அல்லது சட்டரீதியான இழப்பீடுகள் ஏதும் கிடைக்கவில்லை. 


இந்தச் சட்டங்கள் வரலாறு முழுவதும் மக்களை மிரட்டவும் அடக்குமுறைக்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


இதே நேரம் PSTA நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.


எனவே, இந்தச் சட்ட வரைவு குறித்து நீதி அமைச்சுக்கு எதிர்ப்பு கருத்துகளை முன்வைக்கும் வகையில் எதிர்வரும் 27 திகதி சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் - ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நாளை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டமோ உருவாக்கப்படும் PSTA  சட்டமோ எதுவும் எமக்கு வேண்டாம் என்ற கோரிக்கையுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டமாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணக் கையளிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் கையளிக்கப்பட்டது.பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்கக் கோரியும், புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிகழ்வும், ஊடக சந்திப்பும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இன்று நண்பகல் வேலன் சுவாமி தலைமையில் இடம்பெறும்.கடந்த 14.02.2026 முதல் 25.02.2026 வரையான காலப் பகுதியில் கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை ஆகிய மாவட்டங்களிலு. வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வாவட்டங்களிலும் பொது அமைப்பினராலும், நிறுவனங்களாலும் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்களின் பட்டியலே இதன்போது கையளிக்கப்பட்டது.புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்ற வலியுறுத்தல் கோரிக்கையை முன்னிறுத்தும்  இந்த போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் பிரதினிதிகள் -பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் இரத்து செய்யப்படும் என்று இந்த அரசு ஆட்சிக்கு வரும்போது தெளிவாகக் கூறியிருந்தது.இருப்பினும், PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வையில், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) முன்வைக்கப்பட்மை, மக்கள் விரோதமாகவும் எதிரான செயலாகவும் இருக்கின்றது.PTA -வின் கீழ் பல ஆண்டுகளாக நியாயமற்ற வகையில் பலர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து  விடுவிக்கப்பட்ட நபர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் அனுபவித்த அநீதிகளுக்கு சமூக அல்லது சட்டரீதியான இழப்பீடுகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்தச் சட்டங்கள் வரலாறு முழுவதும் மக்களை மிரட்டவும் அடக்குமுறைக்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இதே நேரம் PSTA நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.எனவே, இந்தச் சட்ட வரைவு குறித்து நீதி அமைச்சுக்கு எதிர்ப்பு கருத்துகளை முன்வைக்கும் வகையில் எதிர்வரும் 27 திகதி சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement