• Apr 16 2026

மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு கிரிக்கெட் சமர்!

Ziya / Apr 16th 2026, 4:36 pm
image

மாபெரும்  கிரிக்கெட் சுற்றுப்போட்டி வட்டவளை மீனாட்சி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.


வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் வசிக்கும் நாகராஜ் தினேஷ் என்பவரின்  வழிகாட்டலில் பிரதேச இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.               


நேற்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக  ஈகை சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச புத்திஜீவிகள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பிரதம விருந்தினராக பங்கேற்று இருந்தனர்.          


போட்டியில் ஒரு அணிக்கு ஐந்து சுற்றுகளின் அடிப்படையில்  ராவணா,ரன் ரைடர்,  ரோயல் சேலஞ்சர்ஸ்,  ஸ்ரீ சக்தி,வைட் ரொக், அதிரடி, என ஆறு அணிகள் தனது திறமைகளை மைதானத்தில் வெளிக்காட்டி இருந்தார்கள் .


மிகவும் அபாரமாக முட்டி மோதிக்கொண்ட   கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்     இறுதி சுற்றுக்கு ரோயல் சேலஞ்சர்ஸ்,ராவணா ஆகிய இரு அணிகளும்  தெரிவு செய்யப்பட்டன.     


இந்த இரு அணிகளுக்கு இடையிலான  இறுதிப் போட்டியில் ராவணா அணி ரொயல் சேலஞ்சர்ஸ் அணியை  18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி மகுடத்தை தனதாக்கி கொண்டது.       


இதன்படி இராவண அணியின் தலைவர் சுவேந்திர குமார் கிருபாகரனுக்கு வெற்றி கேடயமும் அணியின் ஏனையவருக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.   


இதன்படி இரண்டாவது இடத்தை தன தாக்கி கொண்ட ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர்  குமாரவேல் அசோக்  மற்றும் ஏனையவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 


இதன் அடிப்படையில்  போட்டியின் சிறப்பு துடுப்பாட்ட வீரராக தேன் செல்வன்  பிரகாஷ்ன்             சிறந்த பிடியெடுப்பாளராக புவனேஸ்வரன் மதுஷான்        சிறந்த பந்துவீச்சாளராக அஜித் ரொகிநாத் சிறந்த ஆறு ஓட்டங்கள் பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் முத்துக்குமார் தங்கேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். 


இவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விசேட அம்சமாகும்      நிகழ்வில்  பெருந்திரளான பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டு களிக்க வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது 

மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு கிரிக்கெட் சமர் மாபெரும்  கிரிக்கெட் சுற்றுப்போட்டி வட்டவளை மீனாட்சி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் வசிக்கும் நாகராஜ் தினேஷ் என்பவரின்  வழிகாட்டலில் பிரதேச இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.               நேற்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக  ஈகை சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச புத்திஜீவிகள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பிரதம விருந்தினராக பங்கேற்று இருந்தனர்.          போட்டியில் ஒரு அணிக்கு ஐந்து சுற்றுகளின் அடிப்படையில்  ராவணா,ரன் ரைடர்,  ரோயல் சேலஞ்சர்ஸ்,  ஸ்ரீ சக்தி,வைட் ரொக், அதிரடி, என ஆறு அணிகள் தனது திறமைகளை மைதானத்தில் வெளிக்காட்டி இருந்தார்கள் .மிகவும் அபாரமாக முட்டி மோதிக்கொண்ட   கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்     இறுதி சுற்றுக்கு ரோயல் சேலஞ்சர்ஸ்,ராவணா ஆகிய இரு அணிகளும்  தெரிவு செய்யப்பட்டன.     இந்த இரு அணிகளுக்கு இடையிலான  இறுதிப் போட்டியில் ராவணா அணி ரொயல் சேலஞ்சர்ஸ் அணியை  18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி மகுடத்தை தனதாக்கி கொண்டது.       இதன்படி இராவண அணியின் தலைவர் சுவேந்திர குமார் கிருபாகரனுக்கு வெற்றி கேடயமும் அணியின் ஏனையவருக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.   இதன்படி இரண்டாவது இடத்தை தன தாக்கி கொண்ட ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர்  குமாரவேல் அசோக்  மற்றும் ஏனையவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்  போட்டியின் சிறப்பு துடுப்பாட்ட வீரராக தேன் செல்வன்  பிரகாஷ்ன்             சிறந்த பிடியெடுப்பாளராக புவனேஸ்வரன் மதுஷான்        சிறந்த பந்துவீச்சாளராக அஜித் ரொகிநாத் சிறந்த ஆறு ஓட்டங்கள் பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் முத்துக்குமார் தங்கேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விசேட அம்சமாகும்      நிகழ்வில்  பெருந்திரளான பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டு களிக்க வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement