• May 14 2025

அதிகாரத்திற்கு வரும் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள்! ஜூன் 2 வரை காலக்கெடு

Chithra / May 14th 2025, 3:45 pm
image

 

சமீபத்தில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி ஆரம்பமாவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அந்த சபைகளின் முதல்வர், துணை முதல்வர், தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கோட்ட மட்டத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பகுதிகளுக்கு ஜூன் 02 ஆம் திகதி முதல் முறையாக சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரத்திற்கு வரும் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஜூன் 2 வரை காலக்கெடு  சமீபத்தில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி ஆரம்பமாவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அந்த சபைகளின் முதல்வர், துணை முதல்வர், தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கோட்ட மட்டத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பகுதிகளுக்கு ஜூன் 02 ஆம் திகதி முதல் முறையாக சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement