கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் (Eastern Pacific) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், படகும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தென்னகக் கட்டளையகம் (SOUTHCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி,
அமெரிக்க தென்னகக் கட்டளையகத்தின் (SOUTHCOM) தளபதி ஜெனரல் பிரான்சிஸ் எல். டொனாவன் (Gen. Francis L. Donovan) நேரடி உத்தரவின் பேரில், 'ஜாயிண்ட் டாஸ்க் போர்ஸ் சதர்ன் ஸ்பியர்' (Joint Task Force Southern Spear) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பிராந்தியத்தில் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் எடுத்து வரும் தொடர் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல் பாதைகள் வழியாக, நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் (Designated Terrorist Organizations) இந்த விசைப்படகு இயக்கப்பட்டு வந்ததை அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த அதிவேக தாக்குதலில் (Lethal Kinetic Strike) படகு முற்றிலும் வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில், படகில் இருந்த ஆண் (Narco-terrorist) ஒருவர் கொல்லப்பட்டார்.
தாக்குதலுக்குப் பிறகு கடலில் தத்தளித்த இரண்டு கடத்தல்காரர்கள் உயிர் பிழைத்தனர். அவர்களை மீட்பதற்காக அமெரிக்க கடலோர காவல்படையின் (US Coast Guard) தேடல் மற்றும் மீட்புப் பிரிவு உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட அந்த இருவரையும் பசிபிக் பிராந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் அமெரிக்க இராணுவ வீரர்கள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என சவுத்காம் (SOUTHCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
வெடித்துச் சிதறிய மர்மப் படகு- அமெரிக்காவின் அதிரடி வேட்டை கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் (Eastern Pacific) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், படகும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க தென்னகக் கட்டளையகம் (SOUTHCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி,அமெரிக்க தென்னகக் கட்டளையகத்தின் (SOUTHCOM) தளபதி ஜெனரல் பிரான்சிஸ் எல். டொனாவன் (Gen. Francis L. Donovan) நேரடி உத்தரவின் பேரில், 'ஜாயிண்ட் டாஸ்க் போர்ஸ் சதர்ன் ஸ்பியர்' (Joint Task Force Southern Spear) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.பிராந்தியத்தில் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் எடுத்து வரும் தொடர் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல் பாதைகள் வழியாக, நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் (Designated Terrorist Organizations) இந்த விசைப்படகு இயக்கப்பட்டு வந்ததை அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்தது.அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த அதிவேக தாக்குதலில் (Lethal Kinetic Strike) படகு முற்றிலும் வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில், படகில் இருந்த ஆண் (Narco-terrorist) ஒருவர் கொல்லப்பட்டார்.தாக்குதலுக்குப் பிறகு கடலில் தத்தளித்த இரண்டு கடத்தல்காரர்கள் உயிர் பிழைத்தனர். அவர்களை மீட்பதற்காக அமெரிக்க கடலோர காவல்படையின் (US Coast Guard) தேடல் மற்றும் மீட்புப் பிரிவு உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இருவரையும் பசிபிக் பிராந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் அமெரிக்க இராணுவ வீரர்கள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என சவுத்காம் (SOUTHCOM) உறுதிப்படுத்தியுள்ளது.