• Sep 12 2025

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடினார்கள்; சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி.

Chithra / Sep 12th 2025, 3:23 pm
image

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இதுவரையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தாயகம் என்ற ஒன்று இருப்பதை வெளிப்படையாக கூறியதில்லை.

குறிப்பாக சபையில் சில முஸ்லீம் தலைவர்கள் பேசும்போது கூட குரோதமான விடயங்கள் வெளிப்படுத்துவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

நாட்டில் விடுதலைப்புலிகளின் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடர்க்கம் 2006ஆம் ஆண்டுவரை சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பொழுது,  அதன் அங்கமாக அப்போதைய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அதில் இணைந்திருந்தார்.

அவர் கிளிநொச்சிக்கு வருகைத்தந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்திருந்தார்.

இதன்போது, தனியான சமையல் காரரை அழைத்துவந்து பிரபாகரன், உரிய சமையலை செய்து வழங்கியிருந்தார்.

இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனாக இருக்கட்டும், முத்த தலைவர் தந்தை செல்வா முதல் - இரா சம்பந்தன் வரை முஸ்லீம் மக்கள் தொடர்பில் மிக தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர்.

மேலும் பெரும் விட்டுக்கொடுப்புக்களை முஸ்லீம்களுக்காக தமிழ் மக்கள் செய்திருந்தனர்.

எனினும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை கூறியிருந்தார்.

அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக்கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார். அப்படி இருந்தும் முஸ்லீம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.

காரணம் யுத்த காலத்தில் இரு பக்கங்களுக்கும் நிறைந்த காயங்கள் உள்ளன. யாழிலும் கூட விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முஸ்லீம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர்” என்றார்.       

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடினார்கள்; சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி. தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இதுவரையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தாயகம் என்ற ஒன்று இருப்பதை வெளிப்படையாக கூறியதில்லை.குறிப்பாக சபையில் சில முஸ்லீம் தலைவர்கள் பேசும்போது கூட குரோதமான விடயங்கள் வெளிப்படுத்துவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.நாட்டில் விடுதலைப்புலிகளின் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடர்க்கம் 2006ஆம் ஆண்டுவரை சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பொழுது,  அதன் அங்கமாக அப்போதைய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அதில் இணைந்திருந்தார்.அவர் கிளிநொச்சிக்கு வருகைத்தந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்திருந்தார்.இதன்போது, தனியான சமையல் காரரை அழைத்துவந்து பிரபாகரன், உரிய சமையலை செய்து வழங்கியிருந்தார்.இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனாக இருக்கட்டும், முத்த தலைவர் தந்தை செல்வா முதல் - இரா சம்பந்தன் வரை முஸ்லீம் மக்கள் தொடர்பில் மிக தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர்.மேலும் பெரும் விட்டுக்கொடுப்புக்களை முஸ்லீம்களுக்காக தமிழ் மக்கள் செய்திருந்தனர்.எனினும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை கூறியிருந்தார்.அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக்கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார். அப்படி இருந்தும் முஸ்லீம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.காரணம் யுத்த காலத்தில் இரு பக்கங்களுக்கும் நிறைந்த காயங்கள் உள்ளன. யாழிலும் கூட விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முஸ்லீம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர்” என்றார்.       

Advertisement

Advertisement

Advertisement