முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னியன் கலாமன்ற மாணவர்கள் பரதநாட்டியத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று, சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான நிதிப் பங்களிப்பு இன்றையதினம் (28.05.2026) வழங்கி வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், அன்பாலயம் அமைப்பின் ஊடாக 6 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிதியானது மாணவர்களின் போக்குவரத்து செலவுகள், பரதநாட்டிய ஆபரணங்கள், உணவுச் செலவுகள் மற்றும் மாணவர்களுடன் பெற்றோர்கள் சென்று வருவதற்கான தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அன்பாலயம் அமைப்பின் சார்பில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலனால் அதற்குப் பொறுப்பான ஆசிரியரிடம் குறித்த நிதியை கையளித்தார்.
தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற இவ் மாணவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள குறித்த மாணவர்களுக்கு இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியத்தில் சாதித்த முல்லைத்தீவு மாணவர்கள் - சர்வதேச மேடையில் பங்கேற்பு முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னியன் கலாமன்ற மாணவர்கள் பரதநாட்டியத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று, சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான நிதிப் பங்களிப்பு இன்றையதினம் (28.05.2026) வழங்கி வைக்கப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், அன்பாலயம் அமைப்பின் ஊடாக 6 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.இந்த நிதியானது மாணவர்களின் போக்குவரத்து செலவுகள், பரதநாட்டிய ஆபரணங்கள், உணவுச் செலவுகள் மற்றும் மாணவர்களுடன் பெற்றோர்கள் சென்று வருவதற்கான தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.அன்பாலயம் அமைப்பின் சார்பில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலனால் அதற்குப் பொறுப்பான ஆசிரியரிடம் குறித்த நிதியை கையளித்தார்.தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற இவ் மாணவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள குறித்த மாணவர்களுக்கு இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.