பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.
"மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது.
இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார்.
இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் அமைச்சர் சந்திரசேகர் கண்டனம் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார். "மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார்.