2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும்.
திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையானது பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு:
உடனடி அழைப்பு இலக்கம்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
பெக்ஸ் இலக்கம்: 0112784422
மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையானது பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம்: 1911 தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537 பெக்ஸ் இலக்கம்: 0112784422 மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com