• May 04 2025

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

Chithra / May 4th 2025, 3:16 pm
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (04) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். 

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (04) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement