• May 22 2025

இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Chithra / May 22nd 2025, 8:35 am
image

 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.

இதற்காக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர்.

புதுடில்லியில் உள்ள நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஜனநாயக பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையில் இந்தியா செல்லவுள்ள இந்தக் குழுவை, நேற்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வரவேற்றார்.

2025 மே 26 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில், நாடாளுமன்ற மற்றும் பாதீட்டின் நடைமுறைகள், நாடாளுமன்றக் குழு அமைப்புகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்திருந்தபோது அறிவித்த, இலங்கையின் 70 நிபுணர்களுக்கான பயிற்சி அறிவிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.இதற்காக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர்.புதுடில்லியில் உள்ள நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஜனநாயக பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர்.பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையில் இந்தியா செல்லவுள்ள இந்தக் குழுவை, நேற்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வரவேற்றார்.2025 மே 26 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில், நாடாளுமன்ற மற்றும் பாதீட்டின் நடைமுறைகள், நாடாளுமன்றக் குழு அமைப்புகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவுள்ளன.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்திருந்தபோது அறிவித்த, இலங்கையின் 70 நிபுணர்களுக்கான பயிற்சி அறிவிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement