இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர்.
அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைவதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி - சஜித் இடையே சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர். அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைவதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.