கடந்த 15 ஆண்டுகளில் வடக்கில் கணித, விஞ்ஞான அடைவுமட்டம் பலவீழ்ச்சிகளை அடைந்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்தியர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய கணித, விஞ்ஞான அடைவுமட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் கொழும்பு சுகாதார அமைச்சிலிருந்து வருகை தந்த யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் வைத்தியர் ஜெகரூபன் என்பவரால் வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய கணித, விஞ்ஞான அடைவுமட்ட புள்ளிவிபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த புள்ளிவிபரங்கள் அடிப்படையில் கணித, விஞ்ஞான அடைவுமட்டம் தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில் வடக்கில் கணித, விஞ்ஞான பாடத்தின் அடைவுமட்டம் வீழ்ச்சி கடந்த 15 ஆண்டுகளில் வடக்கில் கணித, விஞ்ஞான அடைவுமட்டம் பலவீழ்ச்சிகளை அடைந்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்தியர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய கணித, விஞ்ஞான அடைவுமட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் கொழும்பு சுகாதார அமைச்சிலிருந்து வருகை தந்த யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் வைத்தியர் ஜெகரூபன் என்பவரால் வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய கணித, விஞ்ஞான அடைவுமட்ட புள்ளிவிபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குறித்த புள்ளிவிபரங்கள் அடிப்படையில் கணித, விஞ்ஞான அடைவுமட்டம் தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.