வடமராட்சி கிழக்கு தாளையடியில் இருந்து மருதங்கேணி செம்பியன்பற்று வீதிவரை கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
நீண்டகாலமாக குறித்த வீதிகளில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதால் தற்போது இந்த வீதிகளால் பயணம் செய்வது ஆபத்தாக மாறியுள்ளது
இரவு நேரங்களில் நடுவீதியில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளால் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றதுடன் மேலும் விபத்துக்கள் இடம்பெறும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றன
பகல் நேரங்களில் வீதியின் அருகே மேயும் கட்டாக்காலி மாடுகள் அதிகளவாக செம்பியன்பற்று வீதி,மருதங்கேணி வீதி,வடராட்சி கிழக்கு பொதுமைதானம்,போன்றவற்றில் இரவு நேரம் படுத்துறங்குகின்றன.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேசபை உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அதிகாரிகள் அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கட்டாக்காலி மாடுகளின் நடை பாதையாக மாறும் மருதங்கேணி-தாளையடி வீதி - மக்கள் விசனம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் இருந்து மருதங்கேணி செம்பியன்பற்று வீதிவரை கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.நீண்டகாலமாக குறித்த வீதிகளில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதால் தற்போது இந்த வீதிகளால் பயணம் செய்வது ஆபத்தாக மாறியுள்ளதுஇரவு நேரங்களில் நடுவீதியில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளால் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றதுடன் மேலும் விபத்துக்கள் இடம்பெறும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றனபகல் நேரங்களில் வீதியின் அருகே மேயும் கட்டாக்காலி மாடுகள் அதிகளவாக செம்பியன்பற்று வீதி,மருதங்கேணி வீதி,வடராட்சி கிழக்கு பொதுமைதானம்,போன்றவற்றில் இரவு நேரம் படுத்துறங்குகின்றன.சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேசபை உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அதிகாரிகள் அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.