• May 05 2026

காலி சிறைச்சாலையில் பல கைதிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி..!

Chithra / Jan 6th 2024, 4:39 pm
image


காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் தற்போது காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்தனர்.

தற்போது அங்கு நிலைமை சீராக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் பல கைதிகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி. காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது.இதனிடையே, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்தனர்.தற்போது அங்கு நிலைமை சீராக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement